பங்குச் சந்தைகள்:
பங்கு வர்த்தகம் மிக நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. அண்மைக்கால தொழில் நுட்ப வளர்ச்சி பங்கு வர்த்தகத்தை மேலும் மேம்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் தனித்தனி நிறுவனங்களால் நடத்தப்பட்ட பங்கு வர்த்தகம் தேவையின் பொருட்டு ஒரே இடத்தில் நடத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்த நிலையில் தொடங்கப்பட்டவை தான் பங்குச் சந்தைகள்.
நல்ல பங்குகள் விற்பனைக்கு வருகிறது. நாம் அவற்றை நம் தேவைக்கேற்ப வாங்கி வைத்திருக்கிறோம்.
சில நாட்களுக்குப் பிறகு அவற்றின் விலை ஏறுகிறது அல்லது நமக்குப் பணத் தேவை வருகிறது.
அதை நாம் விற்கவேண்டும். நாம் வாங்கியது போல் அவற்றை நம்மிடம் இருந்து வாங்க ஒருவர் தேவை. இல்லையென்றால் விற்பனை செய்வது கஷ்டம். அதனால் விற்பவரையும் வாங்குபவரையும் இணைக்கத் தொடங்கப்பட்டதுதான் பங்குச்சந்தை.
தொடக்க காலத்தில், ஒரு நிறுவனத்தின் பங்குகளை எங்கே வாங்குவது? எப்படி வாங்குவது?
அதற்கென முகவர்கள் இருக்கிறார்களா? தங்கள் முதலீட்டுக்கு என்ன
உத்தரவாதம்?
இது போன்ற பல்வேறு கேள்விகள் மக்களிடம் எழுந்தன. அதனால் முகவர்களின் தேவை ஏற்பட்டது.
அதாவது வாங்குகிறவங்களுக்கும், விற்பவர்களுக்கும் இடையில் பாலமாக வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டார்கள். அப்பொழுது பாலமாக செயல்பட்டவர்கள்தான் தற்பொழுது பங்கு தரகர்கள் அல்லது முகவர்கள் என அழைக்கப்படுகின்றனர். அதில் ஒருவருக்கு ஒருவர் தொடர்புகொள்ள ஏற்பட்ட காலதாமதங்களால் எல்லாத் தரகர்களும் சேர்ந்து நாம் ஒரே இடத்தில் வைத்து பரிவர்த்தனை செய்யலாம் என்று முடிவு செய்து ஒரு பொது இடத்துக்கு வந்தார்கள். அது தான் தற்பொழுது பங்குச் சந்தை என அழைக்கப்படுகிறது.
தற்சமயம் உலகம் முழுக்க 70-க்கும் மேற்பட்ட பங்குச் சந்தைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பங்குப் பரிவர்த்தனையைச் செய்வதற்காகத்தான் பங்குச் சந்தையை ஆரம்பித்தார்கள்.
பங்குச் சந்தையை முதலில் ஆரம்பித்தது ஹாலந்து ஆகும்.
No comments:
Post a Comment