உங்கள் அதிர்ஷ்ட நேரம்

Friday, December 24, 2010

BSE AND NSE

நமது நாட்டின் மிக முக்கிய இரு பங்குச் சந்தைகள் பீ எஸ் ஈ ( BSE ) மற்றும் என் எஸ் ஈ ( NSE )


இதில் பீ எஸ் ஈ ( BSE ) மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்செஞ்ச. 
1875 ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆசியாவின் மிகப்பழமையானநிறுவனம் ஆகும்.
என் எஸ் ஈ ( NSE )  டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்செஞ்ச.


பங்குகள் ( share )


ஒரு நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்யும் நபருக்கு அவர் கொடுக்கும் பணத்தின் மதிப்பிற்க்குரிய அளவில் தன் நிறுவனத்தின் 


உரிமையை பிரித்துக் கொடுப்பது பங்கு ஆகும் என முன்பே பார்த்தோம்.


ஆரம்பத்தில் பங்குகளை பேப்பர் வடிவத்தில் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் இருந்தது. நாளடைவில் அதில் இருந்த நிர்வாக சிக்கல்கள் மற்றும் கணிணி 
துறையின் அசுர வளர்ச்சி இவை இரண்டும் சேர்ந்து பங்குகள் பரிமாறிக்கொள்ளும் வழக்கத்தில் ஒரு பெரிய மறுதலை ஏற்படுத்தியது.


தற்பொழுது நிறுவனத்தின் பங்குகள் கணணி மூலமே இணையத்தில் பரிமாறிக்கொள்ள படுகிறது. உங்களிடமுள்ள பங்குகள் உங்களுடைய டீமாட் 
அக்கௌண்டில் ( demate account )மட்டுமே இருப்பு வைத்து கொள்ளப்படும்.


டீமாட் அக்கௌண்ட் ( Deemat Account )


பணத்தை சேமிக்க ஒரு பேங்க் அக்கௌண்ட் வைத்துள்ளோமே அதுபோல் பங்குகளை சேமிக்க டீமாட் அக்கௌண்ட் ( Deemat Account ).  டீமாட் 
என்பது Dematerialized என்பதன் சுருக்கம். நீங்கள் வாங்கும் அல்லது விற்கும் பங்குகள் எலக்ட்ரானிக் பார்மில் ( Electronic Form ) இந்த அக்கௌண்ட் 
-ல்தான் கணக்கு வைத்துக்கொள்ளப்படும்.


ஒரு உதாரணத்திற்கு நாம் ரிலையன்ஸ் பங்குகள் 100 , ஹீரோ ஹோண்டாவின் பங்குகள் 75 மற்றும் மாருதியின் பங்குகள் 50 வைத்து இருக்கிறோம் 
என்றால் இந்த விபரம் இந்த டீமாட் அக்கௌண்டில் தான் இருக்கும். 


தற்பொழுது பங்குச் சந்தையில் வர்த்தகம் பண்ண இந்த டீமாட் அக்கௌண்ட் அவசியம் .


இந்த டீமாட் அக்கௌனண்ட் ஓபன் பண்ணுவது மிகவும் சுலபம், தேவையான சான்றுகளைக் கொடுத்தால் ப்ரோக்கர்களே ஓபன் செய்து கொடுத்து விடுவார்கள்.


தேவையான சான்றுகள்: பான் கார்டு, முகவரி சான்று, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ போன்றவைதான்


சென்செக்ஸ் ( Sensex )


சென்செக்ஸ் பங்குச் சந்தையின் இன்றைய நிலவரத்தை குறிக்கும் ஒரு குறிட்டு எண் ஆகும். மும்பை பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள  


குறிப்பிடத்தக்க 30 நிறுவனங்களின் அன்றைய சந்தை செயல்பாட்டை வைத்து இதை கணக்கிடுகிறார்கள.  இந்நிறுவனங்களை 12  தொழில் துறைகளில் 


இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள்.


இந்நிறுவனங்களின் மதிப்பு இன்று உயர்ந்தால் அதாவது இந்நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு விற்கப்பட்டால் சென்செக்ஸ் மதிப்பு உயரும் 


அல்லது இந்நிறுவனங்களின் மதிப்பு இன்று குறைந்தால் சென்செக்ஸ் மதிப்பு குறையும்.


நிப்டி ( nifty) 


இதே போல் என்.எஸ்.ஈ ( NSE )  குறியீட்டு எண் நிப்டி ( nifty). இது 50 நிறுவனங்களை வைத்து கணக்கிடப்படுகிறது.


ஒரு நிறுவனம் சென்செக்ஸ் அல்லது நிப்டி-யில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது அல்லது வெளியேற்றபடுகிறது என்பது பொதுவாக பங்குச் சந்தையில் 


ஒரு முக்கிய நிகழ்வாகும். இதைக் கணக்கில் கொண்டு பங்குகளின் மதிப்பு ஏறவோ இறங்கவோ செய்யும்.


ஸ்டாப் லாஸ் (Stop Loss )

ஒரு பங்கை நாம் வாங்கும் முன் தெரிந்து கொள்ளவேண்டியது.


ஸ்டாப் லாஸ் என்றால் நாம் வாங்கிய பங்கின் விலை சரிந்தால் நாம் எந்த விலையில் அந்த பங்கிலிருந்து வெளியேற வேண்டும் என்று முடிவு செய்து கொள்வது.


அதாவது நம்மால் எவ்வளவு நஷ்டம் தாங்க முடியும் அல்லது அப்பங்கின் சப்போர்ட் லெவல் ( support level ) என்ன என்பதை அறிந்துகொண்டு நாம் ஒரு விலையை முடிவு செய்து கொள்ள வேண்டும்.  அந்த விலைக்கும் கீழே பங்கின் விலை சென்றால் கட்டாயம் நாம் அந்தப்பங்கை விட்டு வெளியேறிவிடவேண்டும். 


முக்கியமாக ஒரு பங்கை வாங்கியவுடன் நாம் ஸ்டாப் லாஸ் முடிவுசெய்து விடவேண்டும். நாம் ஆன் லைனில் டிரேடிங் செய்கிறோம் என்றால் 
உடனே நமது ஆர்டரில் ஸ்டாப் லாஸ் ஆர்டர் போட்டுவிட வேண்டும்.  ஆப் லைனில் டிரேடிங் செய்கிறோம் என்றால் உடனே நமது ப்ரோக்கரிடம் ஸ்டாப் லாஸ் விலை என்ன என்பதைச் சொல்லி விட வேண்டும்.


அதைவிட முக்கியம் மார்க்கெட் சரிந்து கொண்டிருக்கிறது அல்லது பங்கின் விலை சரிந்து கொண்டிருக்கிறது என்றால் உடனடியாக நாம் குறிப்பிட்ட ஸ்டாப் லாஸ் விலையில் நமது பங்கு விற்றுவிட்டதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். 


டிரேடிங் அக்கௌன்ட்( Trading  Account )


இது நமக்கும் நமது ஷேர் ப்ரோக்கர்( Share Brokker )க்கும் இடையில் உள்ள அக்கௌண்ட்.  இந்த அக்கௌண்ட்-ல்தான் நம்முடைய முதலீடு பணமாக இருக்கும். இந்த அக்கௌண்டில் உள்ள மதிப்பிற்கேற்ப நாம் பங்குகளை வாங்கிக்கொள்ளலாம்.


ஷேர் ப்ரோக்கர் ( Share Brokker )


யார் வேண்டுமானாலும் பங்குசந்தையில் சென்று பங்குகளை வாங்கி விற்க முடியாது. அதெற்கென பங்கு சந்தையில் பதிவு செய்துள்ள சில நிறுவனங்கள்
உள்ளன. அவர்களைத்தான் நாம் ஷேர் ப்ரோக்கிங் கம்பெனிகள் என்போம். 


அவர்கள் நமக்காக சந்தையில் நாம் விரும்பும் பங்குகளை வாங்கியோ அல்லது விற்றோ தருவார்கள். அதற்காக நாம் அவர்களுக்கு கமிசன் தர 
வேண்டியிருக்கும். இதை பொதுவாக Brokkerage  என்போம். பங்கு வர்த்தகத்தில் லாபம் சம்பாதிக்க இந்த ப்ரோக்கர் கமிசனை புரிந்து கொள்வது மிக அவசியம். 

ஷேர் ப்ரோக்கிங் கம்பெனிகளில்
HDFC
SBICAB SECURITIES
ICICI DIRECT
India Infoline
Sharekahan
India Bulls Securities
Religare Securities
போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.

ஷேர் ப்ரோக்கர் விசயத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1.ஒரு நல்ல ப்ரோகரை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

2.ப்ரோக்கர் கமிசன் நாமே கணக்கிட்டு பழகிக்கொள்வது மிக நல்லது. அப்பொழுதுதான் நமது ஒவ்வொரு வர்த்தகத்திலும் ( Trade ) நமக்கு எவ்வளவு லாபம் என்று
கணக்கிட்டுக் கொள்ளமுடியும்.
3.டிரேடிங் அக்கௌண்ட்டை தினமும், டீமாட் அக்கௌண்ட்டை வாரம் ஒரு முறையும் சரி பார்த்துக்கொள்வது நல்லது.
மொபைல் போனில் டீமாட் அக்கௌண்ட்-ன் 
பங்கு பரிவர்த்தனைகள் கிடைக்குமாறு செய்து கொண்டால் மிகவும் நல்லது
4.டிரேடிங் அக்கௌண்ட்-ல் நம்முடைய முகவரி சரியானதாக இருக்க வேண்டும் இல்லாவிடில் நமது காசோலைகள், நாம் பங்கு வாங்கிய கம்பெனிகளில் இருந்து வரும் தகவல்கள் வேறு முகவரிக்கு சென்றுவிட வாய்ப்புள்ளது.
நாம் முகவரி மாறினால் உடனடியாக ப்ரோக்கரிடம் தெரிவித்து விட வேண்டும்.

BSE யின் முகவரி      NSE யின் முகவரி                            



மேலே கண்ட முகவரியில் நாம் எந்த சந்தையில் பங்கு வாங்கினோமோ அந்த முகவரிக்கு சென்று அன்றைய தினத்தில் நாம் வாங்கிய பங்குகள் என்ன விலையில் முடிந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் கம்பெனிகள் தினமும் தரும் தகவல்களும் ஒவ்வொரு பங்குகளும் எவ்வளவு விற்பனையாகி யுள்ளது போன்ற பல விவரங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment